காலைத் தியானம் – ஜனவரி 24, 2022

மத் 12: 1 – 8

மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்

                                  ஓய்வு நாளில் ஓய்ந்திருந்து அதைப் பரிசுத்தமாக ஆசரிக்கவேண்டும் என்பது பத்துக் கற்பனைகளில் ஒரு கற்பனை. ஓய்வு நாளைப் பரிசுத்தமாக வைத்து கர்த்தரை ஆராதிக்கவேண்டும் என்றால் 39 வகையான செய்கைகளைச் செய்யக்கூடாது என்று பரிசேயர் நிர்ணயித்து வைத்திருந்தார்கள். அவற்றில் ஒன்று, வயலில் அறுவடை செய்யக்கூடாது என்பது. இயேசுவின் சீஷர்கள் வியாபாரம் செய்யும்படி அறுவடை செய்யவில்லை. சில கோதுமைக் கதிர்களை உருவி, கையில் வைத்து தேய்த்து, கோதுமையைச் சாப்பிட்டார்கள். இது பரிசேயருக்கு அறுவடையாகிவிட்டது. எந்த சட்டத்திலும், சட்டத்தின் எழுத்துக்களுக்கு பின்னணியில் ஒரு நோக்கம் உண்டு. அந்த நோக்கம் நிறைவேறாவிட்டால் அந்த சட்டத்தினால் எந்த உபயோகமும் இல்லை. ஆண்டவரை ஆராதிப்பதில்கூட, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஆராதனை முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், ஆண்டவரையே புறக்கணிக்க நேரிடும். கவனமாயிரு.  

ஜெபம்:

ஆண்டவரே, நான் எப்படி பிறரிடம் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்ற கண்ணோட்டத்தோடு எல்லாரையும் பார்க்காதபடி என்னை மாற்றியருளும். ஆமென்.