காலைத் தியானம் – பிப்ரவரி 28, 2022

மத் 22: 15 – 22

பரிசேயர் . . . தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள்

                              பரிசேயர் ரோம ஆட்சியை விரும்பாதவர்கள். ரோமருக்கு வரிப் பணம் செலுத்துகிறதை வெறுக்கிறவர்கள். ஏரோதியர் ரோம ஆட்சிக்கு (ஏரோது ராஜாவுக்கு) ஆதரவு கொடுத்தார்கள். இந்த இரண்டு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டேயிருப்பார்கள். ஆனால் இயேசுவை எப்படியாவது தங்கள் வலையில் சிக்க வைத்துவிட வேண்டும் என்ற குறிக்கோளில் இரண்டு குழுக்களும் ஒன்று சேர்ந்துவிட்டனர். ராயனுக்கு வரிப்பணம் கொடுக்கவேண்டும் என்று இயேசு சொன்னால், தேவனைத் தவிர வேறு ஒருவனின் தலைமையை எப்படி ஏற்றுக்கொள்ளலாம் என்று பரிசேயர் பிடித்துக் கொள்ளலாம். வரி கொடுக்க வேண்டாம் என்று சொன்னால் ராயனுக்கு விரோதமாகப் பேசினார் என்று சொல்லி ஏரோதியர் இயேசுவைப் பிடித்துக் கொள்ளலாம். அருமையான சூழ்ச்சி. ஆனால் இயேசுவிடம் வேலை செய்யவில்லை.

ஜெபம்:

ஆண்டவரே, நான் என் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் உமக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் சேர்த்து நிறைவேற்ற எனக்கு உதவிசெய்யும். ஆமென்.