காலைத் தியானம் – மார்ச் 04, 2022

மத் 21: 13- 24

சந்தைவெளிகுருடரான வழிகாட்டிகளே . . .  

                              பரிசேயரும் வேதபாரகரும் குருடர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஏனென்றால், அவர்கள் நியாயப்பிரமாணத்தின் சட்டத்திட்டங்களைக் கைக்கொண்டாலும் தேவனைக் காணாதவர்களாக இருந்தார்கள். தசமபாகத்தை ஒழுங்காகக் கொடுத்து வந்தாலும் நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவைகள் அவர்களிடம் காணப்படவில்லை. அவர்கள் போய்க் கொண்டிருந்த திசை எது என்று அவர்களுக்கே தெரியவில்லை. பாவம். அவர்கள் குருடர்கள்! அதைவிட மிகப்பெரிய பரிதாபம் என்னவென்றால் அந்த குருடர்கள் தான் மற்றவர்களை வழிநடத்தும் சபைத் தலைவர்களாக இருந்தார்கள்.  மாயக்காரர்களான தலைவர்களைப் பின்பற்றும் ஜனங்கள் மாயக்காரர்களாகத்தானே உருவாகுவார்கள்! நீ எப்படிப்பட்ட திருச்சபைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கிறாய்? பரிசேயரைப் போன்ற தலைவர்களையா அல்லது அப்போஸ்தலர் போன்ற தலைவர்களையா?

ஜெபம்:

ஆண்டவரே, உமக்கு கீழ்ப்படிகிற தலைவர்களை எங்களுக்குத் தாரும். ஆமென்.