காலைத் தியானம் – மார்ச் 10, 2022

மத் 25: 14 – 30

கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்

                              நம் ஆண்டவருக்கும் நமக்கும் உள்ள உறவு எஜமானுக்கும் ஊழியக்காரனுக்கும் இருக்கும் உறவைப் போன்றது என்பதை ஏற்கனவே நாம் தியானித்தோம். இரக்கம், கருணை, தயவு போன்ற குணங்கள் அந்த எஜமானின் ஒரு பக்கம்தான். அவருக்கு கடினமான ஒரு பக்கமும் உண்டு. உன் கிருபையின் நாட்களில் சீக்கிரத்தில் முடிந்துவிடும். உனக்கு இந்த பூமியில் கொடுக்கப்பட்டுள்ள கிருபையின் நாட்கள் முடிந்தவுடன் உன் எஜமான் முன் நின்று கணக்கு சொல்லவேண்டும். அந்நேரம் அவரிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதே. அவர் கடினமானவர் என்பதை அப்பொழுது உணர்வாய். உனக்கு இந்த உலகில் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு எவ்வளவு பெரியது என்பது முக்கியமில்லை. அது ஐந்து தாலந்தாகவோ, இரண்டு தாலந்தாகவோ அல்லது ஒரு தாலந்தாகவோ இருக்கலாம். அந்தப் பொறுப்பை அலட்சியப்படுத்தாமலும் தவறாக பயன்படுத்தாமலும் இரு.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்துள்ள பொறுப்புகளை நேர்த்தியாக நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஞானத்தையும் பெலனையும் எனக்குத் தாரும். ஆமென்.