காலைத் தியானம் – மார்ச் 22, 2022

மத் 27: 1 – 10

நான் பாவஞ்செய்தேன்       

                             பாவத்தின் தன்மை இதுதான். பாவம் செய்யும் வரை அதில் இனிமை காணப்படலாம். பாவத்தில் காணப்படும் இனிமை சாத்தான் நம்மை இழுக்க உபயோகிக்கும் விளம்பரம். அந்த இனிமை மிகவும் தற்காலிகமானது. பாவச் செய்கையை நம்முடைய உள்மனதில் மகிழ்ச்சியைக் கொடுக்காது. மாறாக, மனதில் வேதனையையும் குற்ற மனப்பான்மையையும் உண்டாக்கும்.  இதிலிருந்து நீ மீள முடியாது என்ற பொய்யைச் சாத்தான் நம்மிடம் சொல்லி, மீண்டும் மீண்டும் அப்பாவச் செய்கையில் விழ வைக்கிறான். ஆகையால் பாவத்தில் பிரவேசியாமலிருப்பதே நல்லது. கர்த்தருடைய ஜெபத்தில் இருக்கும் அருமையான மன்றாட்டை சொல்லி, வல்லமை பெற்று, சோதனையிலிருந்து தப்பித்துக் கொள்வோமாக.

ஜெபம்:

ஆண்டவரே, பாவத்திற்கு நேராக இழுக்கப்படாதபடி என்னைத் தடுத்து ஆட்கொண்டருளும். ஆமென்.