காலைத் தியானம் – செப்டம்பர் 03, 2022

லூக்கா 19: 39 – 48

உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் 

                    நம் ஆண்டவர் இன்று நம் வாழ்க்கையில் இன்னும் ஒரு நாளைக் கொடுத்திருக்கிறார். இந்த பூலோக வாழ்க்கை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆயத்தக்காலம். இந்த ஆயத்த காலத்தில் இன்னும் நமக்கு எத்தனை நாட்கள் உண்டு என்பது நமக்குத் தெரியாது. ஆனால் இந்த நாட்கள் மறு உலக வாழ்க்கைக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது மாத்திரம்தான் நிச்சயம். இது நாம் இயேசுவை முகமுகமாய் தரிசித்து, பரலோகத்தில் இருக்கும் மற்ற பக்தர்களோடும் தூதர்களோடும் சேர்ந்து தேவனைத் துதித்துப் பாடி மகிழும் உன்னத வாழ்க்கைக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் காலம். இந்த ஆயத்த நாட்களை எப்படி உபயோகிக்கிறாய்? தேவனைத் துதித்து பாடுகிறாயா? உன் செயல்களில் அன்பு தெரிகிறதா? இவ்வுலக இச்சை என்னும் வலையில் சிக்கிக் கொள்ளாதே.                                                                   

ஜெபம்:

ஆண்டவரே, பரலோகத்தில் உம்மைக் கண்டு துதித்து உம்மோடு வாசம் பண்ணும் காலத்தை எதிர்நோக்கியிருக்கிறேன். இப்போது நீர் கொடுத்திருக்கும் ஆயத்த காலத்தை ஞானத்துடன் உபயோகிக்க உதவி செய்யும். ஆமென்.