காலைத் தியானம் – செப்டம்பர் 24, 2022

லூக்கா 23: 26 – 34

பிதாவே இவர்களுக்கு மன்னியும்

கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருந்தால் நமக்கும் இப்படிப்பட்ட மன்னிப்பில் பங்கு கிடைக்கும். நாமும் நமக்குத் தீமை செய்கிறவர்களை மன்னிக்க முடியும். மன்னிப்பில் மன்னிக்கிறவனுக்கும் மன்னிப்பு பெறுகிறவனுக்கும் புது வாழ்வு கிடைக்கிறது. இப்படிப்பட்ட தேவ அன்பு நம்மில் நிறைந்து காணப்பட வேண்டுமென்றால் நாம் எப்பொழுதும் நம் ஆண்டவரோடு நெருங்கியே வாழ வேண்டும். (சங்கீதம் 25: 15)

ஜெபம்:

ஆண்டவரே, அனுதினமும் என்னோடிருந்து என்னை வழி நடத்தியருளும். ஒரு நேரமும் என்னை விட்டு விலகாதேயும். ஆமென்.