காலைத் தியானம் – அக்டோபர் 08, 2022

யோவான் 3: 9 – 21

ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது 

                           நான் சிறுவனாக இருக்கும்போது எங்கள் வீட்டிலுள்ள முக்கியமான ஒரு கட்டுப்பாடு என்னவென்றால், சாயங்காலம் இருட்டும் நேரத்திற்குள் நான் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். ஏதாவது ஒரு சில நாட்களில் கொஞ்சம் பிந்திவிட்டால், நான் வரும்வரை முன் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு, என் தாத்தா நான் வரும் திசையைப் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். அன்று அது எனக்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் வருத்தமாகவும் இருந்தது.  இன்று அந்த தாத்தாவின் வாழ்க்கைக்காக தேவனைத் துதிக்கிறேன். இன்று கெட்டப் பழக்கங்களில் சிக்கித் தவிக்கும் அநேகர், அந்தப் பழக்கங்களை ஆரம்பித்தது இருளில்தான் என்பதில் சந்தேகம் இல்லை. சாத்தான் இருளுக்கு அதிபதி. கிறிஸ்து ஒளிக்கு அதிபதி. பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் இருளின் பிள்ளைகளாவதற்கு இடம் கொடுக்க வேண்டாம். (எபேசியர் 5:11-13)               

ஜெபம்:

ஆண்டவரே, நான் என்றும் ஒளியின் பிள்ளையாகவே இருக்க விரும்புகிறேன். இருளின் சக்திகள் என்னையும் என் பிள்ளைகளையும் அணுகாதபடி எங்களைக் காத்துக் கொள்ளும். ஆமென்.