காலைத் தியானம் – அக்டோபர் 29, 2022

யோவான் 8: 1 – 11

நீ போ, இனி பாவஞ்செய்யாதே        

                           இயேசு பாவத்தைக் கண்டும் காணாதது போல இருக்கவில்லை. பாவத்தைக் குறித்து, அதற்கென்ன பரவாயில்லை என்று சொல்லவில்லை. இயேசு வேதனைப் பட்டார். வேதனையில் குனிந்து கொண்டார். அவர் பாவத்தை வெறுக்கிறவர். ஆனால் பாவிகளை வெறுக்கிறதில்லை. பாவம் செய்த பெண் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தார். கிறிஸ்தவ மார்க்கம், “மறு சந்தர்ப்பத்தின் மார்க்கம்” என்று அழைக்கப்படுகிறது. Christianity is a religion of second chances. தேவனுடைய ஊழியர்கள் பாவத்தில் விழுந்துவிடாமல் இருக்க ஜெபம் பண்ணு. ஒருவேளை விழுந்துவிட்ட ஊழியர்களை உனக்குத் தெரியுமானால், அவர்களுக்காக விசேஷமாக ஜெபம்செய். கல்லெறிய வேண்டாம். (நீதிமொழிகள் 24: 16)                                      

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய ஊழியர்கள் அதிகமாய் சோதிக்கப்படுகிறார்கள் என்பதை உணருகிறேன். அவர்கள் விழுந்து விடாதபடி அவர்களைப் பெலப்படுத்தியருளும். ஆமென்.