யோவான் 15: 9 – 17
நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்
தேவன் நம்மைத் தெரிந்து கொண்டுள்ளார். கோடிக்கணக்கான மக்கள் அவரை அறியாமல் இருக்கும் நிலையில் அவர் நம்மைத் தெரிந்து கொண்டார். நமக்கு எந்தவித தகுதியும் கிடையாது. அவருடைய மிகுந்த இரக்கத்தினாலும் கிருபையினாலும் மாத்திரமே நாம் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். நம்மை ஊழியக்காரராக மாத்திரமல்ல, அவருடைய சிநேகிதராக இருப்பதற்கும் தெரிந்து கொண்டிருக்கிறார். நாம் செய்யவதற்கு என்ன இருக்கிறது? அவரைத் துதித்துக் கொண்டேயிருப்பதைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை (எபேசியர் 5:19-21). இந்த மகத்தான மகிழ்ச்சியை, இந்த அனுபவத்திற்குள் வராதவர்களுக்கும் அறிவிக்கவேண்டியது நமது கடமை அல்லவா? ஜெபிப்போம், செயல்படுவோம்.
ஜெபம்:
ஆண்டவரே, என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் உம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் அனுபவித்து வருகிறேன். நன்றி சுவாமி. ஆமென்.