காலைத் தியானம் – டிசம்பர் 02, 2022

யோவான் 15: 18 – 27   

போக்குச் சொல்ல அவர்களுக்கு இடமில்லை        

                           இயேசுவைப் பற்றி கேள்விப்படாத மக்கள் கோடிக்கணக்கானோர் இன்றும் உண்டு. அவரைப் பற்றி கேள்விப்பட்டது மாத்திரமல்லாமல், பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்பி, இயேசுவால் பாவக்கறை இல்லாமல் கழுவப்பட்டு, புது வாழ்வு பெற்று, அவருடைய உதவியுடன் பரிசுத்த வாழ்க்கை வாழும் மக்களும் அநேகர் உண்டு. ஆண்டவருடைய கிரியைகளையும் ஆசீர்வாதங்களையும் அநேக முறை வாழ்க்கையில் அனுபவித்த பின்னும், அவரை விட்டு விலகி வாழும் மக்களும் அநேகர் இவ்வுலகில் உண்டு. இப்படிப்பட்டவர்களை இயேசு எச்சரிக்கிறார். போக்குச் சொல்ல அவர்களுக்கு இடமில்லை. உலகத்தில் எல்லாரும் செய்வதைத் தானே நானும் செய்கிறேன் என்று போக்குச் சொல்ல முடியாது. அந்த பெயர்பெற்ற பிரசங்கியார் அல்லது போதகர் செய்வதைத் தானே நானும் செய்கிறேன் என்று கூட போக்குச் சொல்ல முடியாது. உனக்கு உன் பாவத்தைக் குறித்து போக்குச் சொல்ல இடமில்லை.                  

ஜெபம்:

ஆண்டவரே, உலகத்தால் அடிக்கடி இழுக்கப்படுகிறேன். நீர் விரும்பும் பரிசுத்த வாழ்க்கையை அனுதினமும் வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.