காலைத் தியானம் – டிசம்பர் 03, 2022

யோவான் 16: 1 – 11   

நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்        

                           ’நான் போக வேண்டும்’ என்று இயேசு சொன்னபோது, அவருடைய சீடர்கள் அதை விரும்பவில்லை. அவர் இந்த பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேற அவர் போக வேண்டியது அவசியமாய் இருந்தது. அவர் போயிருக்காவிட்டால் அவருடைய மரணத்தின் மூலம் நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்காது. அவர் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற போது தான் பரிசுத்த ஆவியானவரை நம் மத்தியில் இருக்கும்படி அனுப்பினார். நம் வாழ்க்கையில் அநேகத் தருணங்களில் ஏன், ஏன் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். துன்பத்தைச் சந்திக்கும் நேரங்கள் ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் பயிற்சி காலமாக இருக்கலாம். நடக்கப் பழகும் குழந்தையின் கையைப் பிடித்திருக்கும் தாய், அப்பிடியை விடுவது குழந்தை கீழே விழ வேண்டும் என்ற நோக்கத்தினால் அல்ல. குழந்தை சீக்கிரமாக, தானாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தானே! கர்த்தருடைய சித்தத்திற்கு முழுவதுமாய் உன்னை ஒப்புக் கொடு (ஏசாயா 43:2).                   

ஜெபம்:

ஆண்டவரே, நான் விரும்பாத நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் நடக்கும் போதுகூட, நீரே அதை அனுமதித்திருக்கிறீர் என்பதையும், நீர் எப்போதும் என்னை நேசிக்கிறீர் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள உதவி செய்யும். ஆமென்.