காலைத் தியானம் – டிசம்பர் 30, 2022

அப் 2: 14 – 28

மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை  ஊற்றுவேன்                 

                           யூதர்கள், கிரேக்கர்கள் என்ற வித்தியாசம் ஆண்டவருக்குக் கிடையாது. கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள், பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்தவர்கள், CSI, CNI சபைகளைச் சேர்ந்தவர்கள், லூதரன் சபையைச் சேர்ந்தவர்கள் என்ற வேறுபாடெல்லாம் ஆண்டவருக்குக் கிடையாது. மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்றுதான் அவர் வாக்களித்திருக்கிறார். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதுதான் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே நியமம். ”கடைசி நாட்களில்” என்று இங்கு சொல்லப்பட்டிருப்பது ஒரு சில நாட்களை மாத்திரம் குறிக்கவில்லை. இயேசுவின் முதலாம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட மொத்த காலகட்டத்தையும் அது குறிக்கின்றது. கிறிஸ்துவை உண்மையாய் ஏற்றுக் கொண்டவர்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்கள் என்றாலும் சரி, அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தையும் வல்லமையையும் பெறவேண்டுமென்று ஜெபிப்போம். (2 கொரி 11: 28)             

ஜெபம்:

ஆண்டவரே, இந்தியாவில் வாழும் விசுவாசிகள் எல்லாரும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தையும் வல்லமையையும் பெறும் பாக்கியத்தைத் தாரும். ஆமென்.