காலைத் தியானம் – ஜனவரி 06, 2023

நீதி 6: 1 – 35     

சோம்பல் தவிர்ப்போம்   

                           முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பென்ஜமின் ஃபிராங்க்லின் கீழ்கண்ட சம்பவத்தைச் சொன்னார். ஓர் ஊரில் இராஜா ஒருவரின்  குதிரை லாடத்திலிருந்து ஆணி ஒன்று விழுந்துவிட்டதாம். ஒர் ஆணிதானே என்று அலட்சியமாகவும் சோம்பலுடனும் அதனைச் சரிசெய்யாமல் விட்டுவிட்டார் அந்த இராஜா. நாட்கள் கடந்து மாதங்களாகி எதிர்பாராத ஒரு நாளில் எதிரிகள் படையெடுத்து வந்தார்களாம். போர் நடந்துகொண்டிருந்த போது தன் குதிரையின் லாடத்திலிருந்த மற்ற ஆணிகளும் விழுந்து குதிரை வேகமாய்ப் போக முடியாததால் அந்த இராஜா எளிதாய் வீழ்த்தப்பட்டாராம். சோம்பல் அவன் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. இன்னுங்கொஞ்சம் கை முடக்கிக்கொண்டு நித்திரைசெய்யட்டும் என்பாயோ? தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், வறுமை ஆயுதமணிந்தவனைப் போலவும் வரும் (வ 10-11). இந்த உண்மையை உணர்ந்துகொள்கிறவனே, எப்பொழுதும் பரலோக இராஜ்ஜியத்திற்கு ஆயத்தமாயிருக்க முடியும். (மத் 25:1-13)      

ஜெபம்:

கிருபை நிறைந்த இயேசுவே, நீர் எனக்குத் தந்துள்ள வேலைகளை நேர்த்தியாய் செய்ய உதவி செய்யும்.  நான் தேவைக்கு அதிகமாய் உறங்காதபடியும், சோம்பலைத் தவிர்க்கும்படியும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.