காலைத் தியானம் – ஜனவரி 31, 2023

நீதி 31: 1 – 3  

தாயின் அறிவுரைகள்         

                           நீதிமொழிகள் 31ஐ நாம் வாசித்துப் பார்க்கும்போது, ஒரு தாய் தன்னுடைய மகன் எப்படிப்பட்ட மனிதனாய் இவ்வுலகத்தில் வாழ வேண்டும், எப்படிப்பட்ட இராஜாவாக அவன் இருக்க வேண்டும், எப்படிப்பட்ட பெண்ணை அவன் தனக்கென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று உபதேசிக்கிற ஒரு அதிகாரமாக இருக்கிறது. நம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட வாழ்வின் மதிப்புகளை (valuesசை) நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் சிற்றின்பங்களை அல்ல, கர்த்தர் தரும் பேரின்பங்களையே பெற்றுக்கொள்ளும் பிள்ளைகளாக இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல, இந்த அதிகாரம், எப்படிப்பட்ட பெண் புகழப்படுவாள் என்றும் நமக்குக் கற்றுகொடுக்கிறது. கர்த்தருக்குப் பயப்படும் பெண்ணே புகழப்படுவாள். ஒரு பெண்ணின் வேலை, நண்பர் வட்டம், வெளிப்புற அழகு, இவை எதுவும் அவளுக்கு உண்மையான புகழைத் தருவதில்லை. ஒருவள் கர்த்தரோடு நெருங்கி ஜீவிக்கிற பெண்ணாக இருக்கும்பொழுது அவளுடைய குணாதிசயமும் அவராலே மாற்றப்பட்டு யாவரும் புகழுகிற ஒரு பெண்ணாக மாறுகிறாள்.        

ஜெபம்:

என் அன்பு தகப்பனே, எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல valuesசை கற்றுக்கொடுக்க எங்களுக்கு உதவிசெய்யும். ஆமென்.