அப் 19 : 11 – 20
தங்கள் புத்தகங்களைச் சுட்டெரித்தார்கள்
மாயவித்தைக்காரர்கள் தங்கள் மந்திரங்கள் அடங்கிய புத்தகங்களை எல்லாருக்கும் முன்பாக எரித்துப் போட்டார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன. 1. இயேசுவை அறிந்துகொண்டவர்கள் தங்களுடைய பிழைப்புக்கான (பணம் சம்பாதிக்கும்) வழி போகிறதே என்று கவலைப்படவில்லை. 2) பழைய வழிகளைத் திரும்பிப் பார்ப்பதில்லை என்ற தீர்மானத்துடன் புத்தகங்களை எரித்துவிட்டார்கள். 3) பழைய வழிகளை விட்டுவிட்டது எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக, எல்லாருக்கும் முன்பாக புத்தகங்களை சுட்டெரித்தார்கள். பழைய, தீய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்காமல் உன்னால் முன்னேற முடிகிறதா? அல்லது சோதோமைத் திரும்பிப் பார்க்கிற குணம் உன்னிடம் காணப்படுகிறதா? (ஆதியாகமம் 19: 17-26)
ஜெபம்:
சோதனைகளை வென்ற என் இயேசுவே, நான் என்னுடைய பழைய தீய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. முன் நோக்கிப் பயணத்தைத் தொடர எனக்குப் பெலன் தாரும். ஆமென்.