காலைத் தியானம் – ஜூன் 02, 2023

ரோமர் 6: 8 – 11

பாவத்திற்கு மரித்து, இயேசுவுக்குள் தேவனுக்கென்று பிழைத்து    

                        நம்மில் சிலர் நம் பாவத்தோடு தினமும் போராடிக்கொண்டே இருக்கிறோம். எரிச்சல், கோபம் போன்ற “சின்ன” பாவங்களாக இருக்கலாம்; அல்லது ஆபாசபடங்கள் பார்ப்பது, விபச்சாரம் போன்ற “பெரிய” பாவங்களாக இருக்கலாம். அன்றாடம் போராடுகிறோம். அதற்குக் காரணம், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாமும் பாவத்திற்கு மரித்துவிட்டோம் என்கிற உண்மையின் வெளிப்பாடு நமக்கு இல்லை.  தினமும் நம் பாவங்களுக்கு மீண்டும் மீண்டும் மரித்து எழும்பவேண்டிய அவசியம் இல்லை. இயேசுகிறிஸ்து இந்த உண்மையை நம்முடைய ஆவியில் முத்திரை செய்துவிட்டார். இந்த உண்மையை எவ்வளவு ஆழமாக அறிந்திருக்கிறோமோ அவ்வளவு அதிகமாக நம்முடைய ஆத்துமாவிலும் செய்கைகளிலும் அதன் பலன் வெளிப்படத் துவங்கும். எப்படி இயேசுவின்மீது மரணத்திற்கு ஆளுகை இல்லை என்று அறிந்திருக்கிறோமோ அப்படியே நம் மீதும் இனி பாவத்திற்கு அதிகாரமில்லை. இந்த வெற்றியோடு நாம் பாவத்தை மேற்கொண்டு வாழ்வோமாக.                     

ஜெபம்:

என் அன்பு தகப்பனே, பாவத்திற்கு மரித்தவனா(ளா)கி உமக்குள் பிழைத்திருக்கிறேன் என்ற வெளிப்பாடோடு வெற்றி வாழ்க்கை வாழ எனக்கு உதவிசெய்யும். ஆமென்.