காலைத் தியானம் – ஏப்ரல் 01, 2020

1 இராஜா 16: 1- 6

நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி

கர்த்தர் என்னையும் தூளிலிருந்து உயர்த்தியிருக்கிறார். தூளிலும், குப்பையிலும், சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கி கன்மலையின் மேல் நிறுத்தியிருக்கிறார். அதுதான் என் அனுபவம். உன்னுடைய அனுபவம் என்ன? நம் ஒவ்வொருவரையும் கர்த்தர் தூளிலிருந்து உயர்த்தியிருக்கிறார். கர்த்தர் நம்முடைய தகுதியைப் பார்த்து அப்படிச் செய்யவில்லை.  ஒரு நோக்கத்துடன் அப்படி செய்திருக்கிறார். பாஷாவை ஒரு நோக்கத்துடன் கர்த்தர் உயர்த்தினார். உன்னையும் அவர் ஒரு நோக்கத்துடன் உயர்த்தியிருக்கிறார். அந்த நோக்கம் உனக்குத் தெரியுமா? ஒருவனுடைய சுயநலனுக்காகக் கர்த்தர் ஒருபோதும் ஒருவனையும் உயர்த்துகிறதில்லை. நீ அதை உணருகிறாயா? கர்த்தருடைய நோக்கத்தை உன் வாழ்க்கையில் நிறைவேற்றுகிறாயா?   

ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னைத் தூளிலிருந்து உயர்த்தியுள்ளதின் நோக்கத்தை அறிந்து வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.