1 இராஜா 16: 21- 34
யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சகாரியம்
சாலொமோனுக்குப் பின் இரண்டாக உடைந்த இஸ்ரவேல் ஆட்சியில், பத்து கோத்திரங்களின் முதல் அரசன் யெரொபெயாம். இஸ்ரவேலருக்குள், பாவ வாழ்க்கையின் அளவுகோல் என்பது போன்ற பெயர் வாங்கியவன் யெரொபெயாம். அவனுக்குப் பின் நாதாப், பாஷா, ஏலா, சிம்ரி, உம்ரி என்று ஐந்து அரசர்கள் வந்து போன பின், ஆகாப் பத்து கோத்திரங்களுக்கு அரசனாகிறான். ஒவ்வொருவரும் யெரொபெயாமின் பாவ வழியிலே நடந்ததாகத் தான் பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கிறோம். ஆனால் ஆகாப் ராஜாவோ தன் முன்னோர்களுக்கு ஒரு படி மேலாக சென்று, யெரொபெயாமின் பாவங்கள் அற்பமானவை என்று நினைக்கும் அளவுக்குப் பாவம் செய்தான் என்று பார்க்கிறோம். கர்த்தரைப் பகைக்கிறவர்களின் அக்கிரமம் மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் தொடரும் என்பதை யாத்திராகமம் 20:5 ல் பார்க்கிறோம். இஸ்ரவேலர்களை அரசாண்ட ராஜாக்களின் வாழ்க்கையில் அது நிருபிக்கப்படுகிறதைக் காண்கிறோம். நீ எப்படிப் பட்ட தலைமுறைகளை உருவாக்கப் போகிறாய்? What is the legacy you are going to leave behind?
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய இருதயத்துக்குப் பிரியமான தலைமுறைகளுக்கு முன்னோடியாக இருக்கும்படி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.