காலைத் தியானம் – ஏப்ரல் 05, 2020

குருத்தோலை ஞாயிறு

மாற்கு 11: 1- 19; மத் 25: 31-46 

அப்பொழுது ராஜா . . . . (மத் 25: 34)

எருசலேம் கர்த்தருடைய பட்டணம் என்று அழைக்கப்படுகிறது. கர்த்தருடைய ராஜியத்தின் தலைநகரம்!  இயேசு கிறிஸ்து எருசலேமுக்குள் கழுதைக் குட்டியின் மேல் உட்கார்ர்ந்து பவனியாக சென்றது, இது என்னுடைய பட்டணம்; என் தகப்பனுடைய பட்டணம் என்று அறிவிப்பதற்கே. அன்று நடந்த நிகழ்ச்சிகள் யாவும் வரப்போகும் நாட்களில், இயேசு தம் மகிமையிலே திரும்ப வரும்போது நடக்கப் போகிறவைகளின் ஒரு நிழலோட்டம் தான். எருசலேம் ஆலயத்தில் வியாபாரத்துக்கும், அசுத்தத்துக்கும் இடமில்லை என்று சொல்லி இயேசு சாட்டையைக் கையில் எடுத்தார். அவர் திரும்ப வரும்போது, என் ராஜியத்தில் அசுத்தத்திற்கு இடமில்லை என்று சொல்லி செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரித்தெடுப்பார். இது ஆலயத்திலும் ஆலயத்தையும் வியாபாரம் செய்கிறவர்களுக்கு மாத்திரமல்ல, கர்த்தர் வாசம்பண்ண விரும்பும் நம் இருதயத்தை அசுத்தம் செய்யும் நம் ஒவ்வொருவருக்காகவும் கொடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையின் நாள்.  நம்மைப் பரிசுத்தமாகக் காத்துக் கொண்டு ராஜாவின் வருகைக்கு ஆயத்தப்படுவோமாக!

ஜெபம்

ஆண்டவரே, நீரே மனுக்குலத்தின் ராஜா. நீர் திரும்ப வரும்போது என்னை உம்முடைய மந்தையிலே சேர்த்துக் கொள்ளும். ஆமென்.