காலைத் தியானம் – ஏப்ரல் 10, 2020

புனித வெள்ளி

மத் 27: 38- 54

மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்

இயேசு கிறிஸ்து மரித்த விதமாய் வேறு ஒருவரும் மரித்ததில்லை.  இயேசுவின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களையும், அவர் அவைகளை எதிர்கொண்ட விதத்தையும், அவர் பட்ட பாடுகளையும், அவருடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகளையும், அவருடைய மரணத்துக்கு இயற்கை கொடுத்த எதிரொலியையும் பார்த்துக் கொண்டிருந்த ரோம ராணுவ அதிகாரி, இவர் மெய்யாகவே தேவனுடைய குமாரன் என்றான். இயேசுவுக்கு மரணம், தான் பிதாவிடத்திற்குச் செல்லும் ஒரு வழிப் பயணம் என்பது தெரிந்திருந்தபடியால், அவர் பிதாவே உமது கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று சொல்லி மரித்தார்.  மரண பயமில்லாமல் மரித்தார்.  நாம் எப்படி மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டால், எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.  உன் வாழ்க்கை எப்படி இருக்கிறது? மரணத்தை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதை நீ அறிந்திருக்கிறாயா?  நாம் ஒவ்வொருவரும் மரண வாசலின் வழியாகச் செல்லும் நாள் ஒன்று உண்டு. அப்போது நம் பார்வை நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் மீதே இருப்பதாக (1 கொரி 15: 55-57).

ஜெபம்

ஆண்டவரே, நித்திய காலமாய் நான் உம்மோடு பரலோகத்தில் இருப்பேன் என்ற நிச்சயத்திற்காய் நன்றி சுவாமி. ஆமென்.