காலைத் தியானம் – ஏப்ரல் 11, 2020

லூக் 23: 50- 56

யோசேப்பு என்னும் பேர் கொண்ட ஒரு ஆலோசனைக்காரன்

இயேசுவின் சரீரத்திற்கு மரியாதை செய்யக் கூடிய வாய்ப்பை யோசேப்பு என்னும் புண்ணியவான் பெற்றிருந்தான். இந்தப் பாக்கியம் வேறே யாருக்கும் கிடைக்காது என்று தானே நினைக்கிறோம்! மறுபடியும் சிந்திப்போம். திருச்சபை இயேசுவின் சரீரம் தானே! அதற்கு மரியாதை செய்யும் வாய்ப்பு அனுதினமும் நம்முன் இருக்கிறதே! திருச்சபையைத் தங்கள் செய்கைகள் மூலமாக அவமானப்படுத்துகிறவர்களும் உண்டு. அதைத் தங்கள் செயல்கள் மூலமாகக் கனப் படுத்துகிறவர்களும் உண்டு. திருச்சபையைக் கனம் பண்ணும்போது ஆண்டவரின் திருச் சரீரத்தைக் கனம் பண்ணுகிற பாக்கியத்தைப் பெறுகிறோம் (1 கொரி 10:33).

ஜெபம்

ஆண்டவரே, என் செய்கைகளும் எண்ணங்களும் எப்பொழுதும் உம் சரீரமாகிய  திருச்சபைக்கு கனம் கொண்டு வருவதாக. ஆமென்.