கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பண்டிகை
யோவான் 20: 1- 17
இயேசு அவளை நோக்கி மரியாளே என்றார்
உயிர்த்தெழுந்த மீட்பரின் முதல் தரிசனம் ஏன் மரியாளுக்குக் கிடைத்தது? அவள் வாஞ்சையுடன் தேடினாள். அதிகாலையில் இருட்டோடே எழுந்திருந்து தேடிச் சென்றாள். அவளுக்குத் தரிசனம் கிடைத்தது. நாமும் வாஞ்சையுடன் தேடினால் அவரைக் கண்டு கொள்ளுவோம். காலைத் தியான வேளையில் அவரைக் காண்கிறோமா? அவருடைய தரிசனம் நமக்குக் கிடைக்கிறதா? உயிர்த்தெழுந்த இயேசு நம்மோடு தனிப்பட்ட முறையில் உறவாட ஆவலோடு இருக்கிறார். நாம் இரண்டு காரியங்கள் செய்யவேண்டும். வாஞ்சையோடு தேட வேண்டும். அதிகாலையில் (நீ உன் அனுதின வேலைகளுக்குள் செல்லுமுன்) தேட வேண்டும். தேடினால் அவர் உன்னையும் பெயர் சொல்லி அழைப்பார் (ஏசாயா 43:1).
ஜெபம்
ஆண்டவரே, உம் தரிசனம் பெற்று அனுதினம் உம்மோடு உறவாடும் பாக்கியத்தை எனக்குத் தாரும். ஆமென்.