காலைத் தியானம் – ஏப்ரல் 14, 2020

1 இராஜா 17: 10- 16

எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டு வா

கர்த்தருடைய வழிகள் அதிசயமானவை. அவைகள் நம் புத்திக்கு எட்டாதவை.  கர்த்தர் எலியாவை வசதியுள்ள ஒரு பணக்காரனிடம் அனுப்பவில்லை. சாகப் போகும் நிலையிலிருக்கும் ஒரு ஏழை விதவையிடம் அனுப்புகிறார். கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து வந்த ஆகாப் ராஜாவின் அரசாட்சியில் இப்படி இரண்டு பேர் இருந்தது நமக்கு ஊக்கமளிக்கிறது. எலியாவும், ஏழை விதவையும் ஒரு கேள்வியும் கேட்காமல் அப்படியே கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள். அதற்கான ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கிறார்கள். இன்று திரியேக தேவனை ஆராதிப்பதற்கு உலகெங்கும் பல தடைகள் வந்து கொண்டு இருக்கின்றன. நம்மைச் சுற்றிலும் அட்டூழியங்களும் அநியாயங்களும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. உண்மையுடன், லஞ்சம் கொடுக்காமல் வாழ முடியாது என்ற நிலை நம் நாட்டில் உருவாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவருடைய வழிநடத்துதலின்படி வாழ்கிறவர்களைக் கர்த்தர் தேடுகிறார். உன்னை அவர் நம்பலாமா?

ஜெபம்

ஆண்டவரே, அநியாயமே தலைத் தூக்கி நிற்கும் இந்நாட்களில், உம் வார்த்தைக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியும் மனதை எனக்குத் தாரும். ஆமென்.