காலைத் தியானம் – ஏப்ரல் 15, 2020

1 இராஜா 17: 17- 24

பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது

ஏழ்மை, சாப்பிடுவதற்குக் கூட ஒன்றுமில்லை என்ற நிலையிலிருந்து கர்த்தர் அந்த விதவையைத் தூக்கியெடுத்தார். கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின் படியே, பானையிலே மாவு செலவழிந்து போகவும் இல்லை; கலசத்திலே எண்ணெய் குறைந்து போகவுமில்லை என்பதை 16ம் வசனத்தில் பார்த்தோம். அதற்குப் பிறகு விதவையும் அவளுடைய மகனும் தங்கள் வாழ்நாளெல்லாம் ஒரு துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று விதவையின் கதை முடியவில்லை.  விதவையின் மகன் வியாதிப்பட்டு மரித்துவிடுகிறான். மரித்தவன் எலியாவின் ஜெபத்தின் மூலமாக உயிரோடெழுப்பப் படுகிறான். நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தரிடமிருந்து வரும் அற்புதங்கள் பலவற்றை அனுபவிக்கிறோம். அதனால் மறுபடியும் துன்பம் வராது என்று அர்த்தமில்லை. துன்பமும் சவால்களும் வரும்போதெல்லாம் கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும். அவர் ஒவ்வொரு முறையும் நம்மைக் காத்து வழிநடத்த வல்லவராயிருக்கிறார்.

ஜெபம்

ஆண்டவரே, நான் எத்தனை முறை துன்பங்களை எதிர்கொண்டாலும் உம்மைப் பற்றியிருக்கும் பிடியை விட்டுவிடாதபடி எனக்குப் பெலன் தாரும்.   ஆமென்.