காலைத் தியானம் – ஏப்ரல் 19, 2020

1 இராஜா 18: 19- 21

நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்

ஆகாபும் எலியாவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிவிட்டார்கள். இப்போது யார் சொன்னது சரியென்று நிருபிக்க வேண்டுமே! ஆகையால் எலியா ஒரு சவாலை ஆகாப் ராஜா முன்பாக வைக்கிறான். ஆகாபும் அதற்கு சம்மதிக்கிறான். அந்த சவாலின் மூலமாக கர்த்தர் எப்படி இஸ்ரவேல் மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார் என்பதைக் கவனியுங்கள். எலியா இப்போது நேரடியாக இஸ்ரவேலரிடம் பேசுகிறான். உங்கள் பிதாக்களோடு இருந்து அவர்களை வழிநடத்தி, காத்து வந்த கர்த்தரா, அல்லது உங்கள் ராஜாவும் அவனுடைய மனைவியாகிய யேசபேலும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள பாகாலா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று மக்களிடம் சவால் விடுகிறான். யார் உண்மையான தேவன்? கர்த்தரா அல்லது பாகாலா? இன்று நம்முன் இருக்கும் சவாலும் அதுதான். யார் உண்மையான தேவன்? கர்த்தரா அல்லது வேறே தெய்வங்களா?   கர்த்தரா அல்லது வேறே மனிதரா? கர்த்தரா அல்லது உன் பணமா?  கர்த்தருடைய இடத்தை வேறே யாருக்கும், எதற்கும் பகிர்ந்து கொடுக்க முடியாது.

ஜெபம்

ஆண்டவரே, இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடக்கும் பழக்கத்தை என்னிடத்திலிருந்து முற்றிலும் எடுத்துப் போடும். உம்மை முழு மனதோடே பற்றிக் கொள்ள உதவி செய்யும். ஆமென்.

2 thoughts on “காலைத் தியானம் – ஏப்ரல் 19, 2020

Comments are closed.