காலைத் தியானம் – ஏப்ரல் 21, 2020

1 இராஜா 18: 29- 38

இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன்

எலியா, ஆகாப் ராஜாவிடம் மழை பெய்யாது என்று சொல்லி விட்டு, கேரீத் ஆற்றண்டைக்குப் போய் ஒளிந்து கொண்டது கர்த்தருடைய வார்த்தையின் படி தான். அங்கிருந்து சாறிபாத் விதவையின் வீட்டிற்குச் சென்றதும், அங்கே பல அற்புதங்களைச் செய்ததும் கர்த்தருடைய வார்த்தையின்படி தான். மறுபடியும் ஆகாப் ராஜாவை வந்து சந்தித்து அவனிடம் சவால் விட்டது, இஸ்ரவேல் மக்களின் குற்றத்தைச் சுட்டிக் காட்டியது ஆகியவையும் கர்த்தருடைய வார்த்தையின்படி தான். காளைகளைப் பலியிட்டு நெருப்பிடாமல் இருந்தும், அக்கினியால் பட்சிப்பவரே உண்மையான தேவன் என்ற பரீட்சையை எலியா வைத்ததும் கர்த்தருடைய வார்த்தையின் படி தான்.  இப்படி எந்த ஒரு செயலிலும் எலியா தன் சொந்த எண்ணத்தின்படி செயல்படவில்லை என்பது நமக்கு ஒரு பெரிய பாடம். ஒரு சில காரியங்களில் அல்ல, எல்லாவற்றிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே நாமும் செயல்படுவோமாக.

ஜெபம்

ஆண்டவரே, எப்போதும், எல்லா செயல்களிலும் உம்முடைய வார்த்தையின்படியே செயல்பட எனக்குக் கிருபை தாரும். ஆமென்.