காலைத் தியானம் – ஏப்ரல் 22, 2020

1 இராஜா 18: 39- 46

கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம்

ஆகாப், கர்த்தரே தெய்வம் என்று சொன்னதாகத் தெரியவில்லை. இஸ்ரவேல் மக்களெல்லாரும் கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்று முகங்குப்புற விழுந்து சத்தமிட்டார்கள். எலியாவின் பிரதான வேலை முடிந்துவிட்டது. கர்த்தரின் இருதயத்தில் அவருடைய ஜனங்களுக்கு ஒரு தனி இடம் எப்போதும் இருக்கிறது. கர்த்தரை தேவனென்று ஏற்றுக் கொண்ட நாம், இயேசுவின் இரத்ததால் கழுவப்பட்ட நாம், அவரை விட்டு விலகிப் போவதை அவர் விரும்புகிறதில்லை. அப்படியே நாம் விலகிப் போவோமானால் அவருடைய மனது மிகவும் வேதனைப் படுகிறது. நாம் மனந்திரும்பி, அவர் இரக்கத்தை நாடி, அவரிடம் திரும்பி வந்தால் பஞ்சமும், பொருளாதார சிக்கல்களும், கொள்ளை நோயும் நம் நாட்டை விட்டே போய்விடும்.

ஜெபம்

ஆண்டவரே, நான் உம்முடைய பிள்ளை என்ற பெயருக்குத் தகுதியுள்ளவனா(ளா)க வாழவில்லை. என்னை மன்னித்து என் நாட்டில் இருக்கும் நோயையும் பொருளாதார சிக்கல்களையும் நீக்கியருளும். ஆமென்.