காலைத் தியானம் – ஏப்ரல் 23, 2020

1 இராஜா 19: 1- 8

போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்

எலியா தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தர் எவ்வளவோ பெரிய காரியங்களைச் செய்தார். அவையெல்லாம் கர்த்தருடைய செயல் என்பதை உணராத ஆகாப் ராஜாவும், அவன் மனைவியான யேசபேலும் நடந்தவையெல்லாம் தங்களுக்கு விரோதமாக எலியா செய்தவை என்றே நினைத்தார்கள்.  யேசபேல் எலியாவைக் கொல்ல வகைத் தேடினாள். எலியாவுக்குச் சோர்வு ஏற்பட்டுவிட்டது. போதும் ஆண்டவரே, நான் மரித்து விடுகிறேன். என்னை உம்மிடம் அழைத்துக் கொள்ளும் என்கிறான். கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து வல்லமையாய் அவருக்காக ஊழியம் செய்கிறவர்களுக்குக் கூட மனச் சோர்வு ஏற்படுவது உண்டு. போதும் ஆண்டவரே என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்படுவது உண்டு. அவ்ர்களுக்காக ஜெபிக்க வேண்டியது நம்முடைய கடமை. உன்னுடைய கடமை. உன் ஜெபத்தைக் கேட்டு ஆண்டவர் தம்முடைய தூதனை அனுப்பி ஊழியக்காரர்களுக்கு புது பெலன் கொடுப்பார்.

ஜெபம்

ஆண்டவரே, பலவித அனுபவங்களினால் சோர்வுற்றிருக்கும் உம்முடைய ஊழியக்காரரைத் தூக்கி நிறுத்தும். அவர்களை உற்சாகப் படுத்தும். ஆமென்.