காலைத் தியானம் – ஏப்ரல் 24, 2020

1 இராஜா 19: 9- 14

எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்?

இங்கே என்ன செய்கிறாய் என்று கர்த்தர் கேட்கிறார் என்றால் எலியா கர்த்தருடைய வார்த்தையின்படி அங்கே வரவில்லை என்று அர்த்தம். கர்த்தர் இரண்டு முறை அதே கேள்வியைக் கேட்கிறார். இரண்டு முறையும் எலியா அதே காரணங்களைச் சொல்லி தன் செயலை நியாயப்படுத்துகிறான். பலிபீடங்களை இடித்து, தீர்க்கதரிசிகளைக் கொன்று போட்டதெல்லாம் பழைய கதை. இப்போது யேசபேல் மாத்திரம்தான் எலியாவைக் கொன்றுவிடுவேன் என்று சபதம் செய்தாள் (இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் அல்ல). கர்த்தருடைய சித்தத்தை தெரிந்து கொள்ளாமல் செயல்பட ஆரம்பித்து விட்டால், நாமும் நம்முடைய செயல்களை நியாயப்படுத்த ஏகப்பட்ட காரணங்களை வைத்திருப்போம்.  எதையும் அவரைக் கேட்காமல், அவருடைய பதிலுக்குக் காத்திருக்காமல் செய்யாதே.

ஜெபம்

ஆண்டவரே, எல்லாவற்றிலும் உம்முடைய சித்தத்துக்காகக் காத்திருந்து, அதை அறிந்து செயல்பட வேண்டிய ஞானத்தையும் பொறுமையையும் தாரும். ஆமென்.