காலைத் தியானம் – ஏப்ரல் 25, 2020

1 இராஜா 19: 15- 18

கர்த்தர் அவனைப் பார்த்து . . .

போதும், போதும் என்று பிடிவாதம் பிடிக்கிறவனைக் கர்த்தர் கட்டாயப்படுத்த மாட்டார். ஒருவேளை கர்த்தர் இரண்டாவது முறையும் இங்கே என்ன செய்கிறாய் என்ற கேள்வியைக் கேட்டவுடன், எலியா கர்த்தரை நோக்கி ஆண்டவரே என்னை மன்னியும்; நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லை! நான் ஒருவன் தான்; ஒருவன் தான் என்று அழுகிறாயே! நான் ஏழாயிரம் பேரை வைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மேலும் கர்த்தர் எலியாவை விடுவதற்கு முன் அவன் மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்.  1. ஆசகேலைச் சீரியாவின் ராஜாவாக அபிஷேகம் பண்ணவேண்டும். 2. யெகூவவை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம்பண்ண வேண்டும். 3. எலிசாவைத் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ண வேண்டும். கர்த்தருடைய வேலை உடைக்கப்படாமல் தொடர வேண்டும் என்பது அவருடைய சித்தம்.

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய ஊழியங்கள் தொடர்ந்து நடை பெறுவதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குக் கண்பியும். ஆமென்.