1 இராஜா 19: 19- 21
அவன் மேல் தன் சால்வையைப் போட்டான்
எலியா எலிசாவின் மீது தன் சால்வையைப் போட்டது, எலிசா தன் இடத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணப்படுகிறான் என்பதின் அடையாளம். ஏரை ஓட்டிக்கொண்டிருந்தவன் அதை உடைத்து, மாட்டையும் அடித்து ஜனங்களுக்கு விருந்து கொடுத்துவிட்டு எலியாவுக்குப் பின் சென்று விட்டான். இங்கு ஒபதியாவைப் போலில்லாமல், எலிசா முழு நேர ஊழியத்துக்கு அழைக்கப்படுகிறான். எந்த வேலையிலிருந்தாலும் அதைச் செய்துகொண்டே கர்த்தருடைய வேலையைச் செய்ய வேண்டுமா அல்லது முழு நேர ஊழியம்தான் சிறந்ததா என்னும் கேள்வி பல கிறிஸ்தவர்கள் மனதில், குறிப்பாக இளைஞர்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு சரியான பதில், கர்த்தர் உனக்கு என்ன சொல்லுகிறாரோ அதை செய் என்பதே. கர்த்தர் உன்னை முழு நேர ஊழியத்துக்கு அழைத்தால் உன் ஏர்களை உடைத்துப் போட்டு விட்டு ஊழியத்துக்குப் போ. திரும்பிப் பார்க்காதே! (லூக்கா 9: 62).
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய அழைப்பைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.