காலைத் தியானம் – ஏப்ரல் 27, 2020

1 இராஜா 20: 1- 12

உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும் . . . நீ எனக்குக் கொடுக்க வேண்டும்

அநியாயம் செயதவனைத் தேடி அநியாயம் வருகிறது. சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் மூலமாக அந்த அநியாயம் ஆகாப் ராஜாவின் வாசற்படிக்கு வருகிறது. பெனாதாத்துடன் முப்பத்திரண்டு ராஜாக்களும், அவர்களுடைய சேனைகளும், குதிரைகளும், இரதங்களும் இருந்தபடியால் அவன் நினைத்த படியெல்லாம் நடக்கும் என்று நினைத்தான். அவனுக்குத் தன் கூட்டமைப்பிலே எக்கச்சக்க நம்பிக்கை. ஆகையால் யுத்தத்துக்குக் கூட தயாராகாமல் மற்ற கூட்டாளிகளுடன் கூடாரத்திலே குடித்துக் கொண்டிருந்தான். சீரியாவின் ராஜாவுக்குத்தான் கர்த்தரைத் தெரியாது என்றால், ஆகாப் ராஜாவாகிலும் இந்த சூழ்நிலையில் கர்த்தரைத் தேடியிருக்கலாம். அதுவும் நடக்கவில்லை. இன்று நம்முடைய உலகம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. அநியாயம் செய்கிறவர்களுக்கும் அநியாயத்தை எதிர்கொள்ளுகிறவர்களுக்கும் கர்த்தருடைய பயம் இல்லை.

ஜெபம்

ஆண்டவரே, அநியாயங்களை முறித்துப் போடும். அப்பாவிகளைக் காத்துக் கொள்ளும். ஆமென்.