காலைத் தியானம் – ஏப்ரல் 28, 2020

1 இராஜா 20: 13- 21

ஒரு தீர்க்கதரிசி . . . ஆகாபிடத்தில் வந்து

ஆகாப் தன் மூப்பர்களை வரவழைத்து ஆலோசனை பண்ணினான். ஆனால் கர்த்தரைத் தேடவில்லை.  கர்த்தரோ தன் ஜனங்கள் துன்பப்படுவதை விரும்பவில்லை. ஆகையால் ஆகாபிடம் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார். பெனாதாத்தையும் அவனுடைய கூட்டாளிகளையும் உன் கையில் ஒப்புக் கொடுப்பேன் என்று கர்த்தர் ஆகாபிடம் சொன்னார். சொன்னபடியே செய்தார். பெனாதாத்தும் அவனைச் சேர்ந்த சிலரும் தப்பி ஓடிவிட்டார்கள். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை நேசிக்கிறார். அவர் உன்னையும் நேசிக்கிறார். ஆகாபைப் போல நீ இருந்துவிடாதே.

ஜெபம்

ஆண்டவரே, நானும் உம்மை நேசிக்கிறேன். உமக்குப் பிரியமில்லாத ஒன்றையும் செய்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.