1 இராஜா 20: 22-30
கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல் மலைகளின் தேவனாயிருக்கிறார்
மலைகளிலே நடந்த யுத்தத்தில் இஸ்ரவேலர் வெற்றி பெற்று விட்டனர். சீரியாவின் ராஜாவின் ஊழியக்காரர் பெனாதாத்திடம், இஸ்ரவேலருக்குத் துணை நிற்கும் கர்த்தர் மலைகளின் தேவன்; ஆகையால்தான் அவர்கள் மலைகளில் நடந்த யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டர்கள். மேலும், பள்ளத்தாக்கிலே யுத்தம் நடந்தால் எளிதாக சீரியாவின் ராஜா வென்று விடலாம் என்று சொல்லுகிறார்கள். நம்முடைய கர்த்தர் மலைகளின் கர்த்தர் மாத்திரமல்ல; பள்ளத்தாக்குகளின் கர்த்தரும் கூட. அவர் உலக மக்கள் அனைவரின் கர்த்தர். அவர் எல்லா சூழ்நிலைகளுக்கும் கர்த்தர். எல்லா சூழ்நிலைகளிலும் அவரைப் பிடித்துக் கொண்டு அவருடன் நெருங்கி வாழ்கிறாயா?
ஜெபம்
ஆண்டவரே, எல்லா சூழ்நிலைகளிலும் நீரே என் துணை. கடினமான சூழ்நிலைகளை நான் கடந்து செல்லும்போது என்னைப் பிடித்துக் கொள்ளும். ஆமென்.