காலைத் தியானம் – ஏப்ரல் 30, 2020

1 இராஜா 20: 31- 43

சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனைதப்பிப்போகும்படி நீ விட்டபடியால்

கர்த்தர் எதிரி என்று குறித்தவனை ஆகாப் சகோதரன் என்று சொல்லுகிறான். உன் வெள்ளியும் பொன்னும் மாத்திரமல்ல, உன் பெண்களும் உன் குமாரரும் கூட எனக்கு வேண்டும் என்று சொன்னவனிடம் ஆகாப் உறவு கொண்டாடுகிறான். எதிரியின் நயவஞ்சக பேச்சுக்கு ஆகாப் மயங்கிவிட்டான். கர்த்தருடைய எதிரியோடு ஆகாப் ஒப்பந்தம் செய்கிறான். கர்த்தர் வெறுக்கிறவனை உன் நண்பனாக்கிக் கொள்ளாதே. கர்த்தருடைய எதிரிக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை உன் மீது விழுந்துவிடும்.

ஜெபம்

ஆண்டவரே, என்னுடைய ஒவ்வொரு உறவிலும் நான் ஜாக்கிரதையாயிருக்க எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.