1 இராஜா 21: 17- 22
என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா?
எலியாவுக்கு தான் செய்தது தெரியாது என்று ஆகாப் நினைத்தான். நாபோத்தைக் கொலை செய்து அவனுடைய திராட்சத்தோட்டத்தை எடுத்துக் கொண்டது ஒரு சிலருக்கே தெரிந்த இரகசியம் என்று ஆகாப் நினைத்தான். இத்தனை வருடங்களுக்குப் பின்னும், இத்தனை அனுபவங்களுக்குப் பின்னும், கர்த்தரின் பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை என்பது ஆகாபுக்குத் தெரியாதா? மேலும் ஆகாப் எலியாவைத் தன் பகைஞனாகப் பார்க்கிறான். சாத்தான் இயேசுவின் பகைஞன். ஆகையால் இயேசுவின் பிள்ளைகளுக்கும் சாத்தான் பகைஞன். உன் தவறுகளைச் சுட்டிக் காட்டும் கர்த்தருடைய பிள்ளை உனக்குப் பகைஞனாகத் தோன்றினால், நீ செல்வது சாத்தானுடைய வழி என்பதைப் புரிந்து கொள். உன் இரட்சகராகிய இயேசுவின் பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து உன் வாழ்கைப் பயணத்தில் தொடந்து செல்.
ஜெபம்
ஆண்டவரே, என் எண்ணங்களும், வார்த்தைகளும், செயல்களும் உமக்கு மறைவானதல்ல. உம் உள்ளத்தைப் புண்படுத்தும் எதையும் நான் செய்து விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.