காலைத் தியானம் – மே 7, 2020

1 இராஜா 22: 15 – 23

பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது 

பரிசுத்த ஆவியானவர் ஒருவரே. அவருக்கு விரோதமாகச் செயல் படுகிற அசுத்த ஆவிகள் அநேகம் உண்டு. நாம் அசுத்த ஆவிகளைக் குறித்து ஒன்றும் தெரியாமல் இருக்கக் கூடாது. பரிசுத்த வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பல இடங்களில் அசுத்த ஆவிகளைக் குறித்து வாசிக்கிறோம். பொய்யின் ஆவி உண்டு. இச்சைகளின் ஆவி உண்டு. மூர்க்கத்தின் ஆவி உண்டு.  கர்த்தர் ஆகாபிடம் பேசும்படி பொய்யின் ஆவியை அனுமதித்தார். அவரோ மிகாயா மூலமாக நடக்கப் போகும் உண்மையை விவரித்தார். பொய்யின் ஆவி ஆகாபுக்குப் பொய்யான நம்பிக்கையைக் கொடுத்தது. பொய்யே உருவான ஆகாப், பொய்யின் ஆவி சொல்வதை விசுவாசிக்க முடிவெடுத்தான். நம் ஒவ்வொருவர் முன்னும் பரிசுத்த ஆவியானவரும் இருக்கிறார். அசுத்த ஆவிகளும் இருக்கின்றன. நாம் எதைத் தெரிந்து கொள்ளுகிறோம் என்பது நம் கையில் இருக்கிறது.                        

ஜெபம்

ஆண்டவரே, அசுத்த ஆவிகள் என்னை ஏமாற்றிவிடாதபடி நீர் எப்பொழுதும் என் அருகிலேயே இரும். நன்மையானதையே தெரிந்து கொள்ளும் ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.