காலைத் தியானம் – மே 12, 2020

2 இராஜா 1: 7- 18

கர்த்தருடைய தூதன் . . . அவனுக்குப் பயப்படாதே என்றான் 

நீ பிழைக்க மாட்டாய் என்கிற கர்த்தருடைய செய்தியைக் கேட்ட பின்னும் அகசியா எலியாவின் மீதுதான் தன் கோபத்தைத் திருப்புகிறான். அவனைக் கொண்டுவந்து தன் முன் பணிய வைத்து அவனைக் கொல்ல வேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும். ஆகையால் தான் ஒரு எளிய தீர்க்கதரிசியைப் பிடிக்க ஒரு தலைவனையும் ஐம்பது சேவகரையும் அனுப்புகிறான். அதுவும் மூன்று முறை அப்படி அனுப்பி 102 பேரை மரிக்கக் கொடுக்கிறான். கடைசியில் கர்த்தருடைய தூதனின் உத்திரவின் படி எலியா நேரில் சென்று அகசியாவிடம் கர்த்தருடைய செய்தியை மறுபடியும் கொடுக்கிறான். சில சமயங்களில் நமக்கும் நாம் கேட்க விரும்பாத செய்தி கர்த்தரிடமிருந்து வரக்கூடும். அதை நாம் மனத்தாழ்மையுடன் ஏற்றுக் கொள்ளுகிறோமா அல்லது அதைப் புறக்கணித்து விடுகிறோமா? அல்லது அந்த செய்தி யார் மூலமாக வருகிறதோ அவர்களிடம் குறை கண்டுபிடித்து அவர்கள் பெயரைக் கெடுக்க முயற்சிக்கிறோமா?                       

ஜெபம்

ஆண்டவரே, நீர் என் குறைகளையும் பாவங்களையும் சுட்டிக் காட்டும்போது மனத்தாழ்மையோடு அதை ஏற்றுக் கொண்டு, உம்மை மாத்திரம் நோக்கிப் பார்க்கும் மனப் பக்குவத்தை எனக்குத் தாரும். ஆமென்.