காலைத் தியானம் – மே 13, 2020

2 இராஜா 2: 1- 3    

நான் உம்மை விடுகிறதில்லை      

எலியா எலிசாவின் மீது தன் சால்வையைப் போட்டதிலிருந்து, எலிசா எலியாவுக்குப் பின்சென்று அவனோடேயே இருந்தான். எலியாவுக்கு ஊழியஞ்செய்தது மாத்திரமல்லாமல், அவனிடமிருந்து கர்த்தருக்கு தீர்க்கதரிசியாக இருப்பதைக் குறித்து பயிற்சி பெற்று வந்தான்.  கர்த்தர் எலியாவை எடுத்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்பது எலியாவுக்கும், எலிசாவுக்கும் மற்ற தீர்க்கதரிசிகளின் புத்திரருக்கும் வெளிப்படுத்தப் பட்டிருந்தது. எலிசா தன்னோடு வரக்கூடாது என்பது எலியாவின் விருப்ப அல்ல. ஒருவேளை, எலிசாவின் அர்ப்பணிப்பு எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ள எலியா அவனை கில்காலிலேயே இருக்க சொல்லியிருக்கலாம். எலிசாவோ, கடைசி நிமிடம் வரை உம்மோடே இருப்பேன் என்று சொல்லிவிட்டான். நீ கர்த்தருக்காக உன்னை அர்ப்பணித்திருக்கிறாயா? உன் அர்ப்பணிப்பு எப்படிப் பட்டது?                                

ஜெபம்

ஆண்டவரே, என் கடைசி மூச்சு வரை நான் என் அர்ப்பணிப்பிலிருந்து விலகாதபடி எனக்குக் கிருபை தாரும். ஆமென்.