காலைத் தியானம் – மே 15, 2020

2 இராஜா 2: 7- 10

உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம்  

எலியா எடுத்துக்கொள்ளப்படும் நேரம் வந்துவிட்டது. தன்னிடமிருந்து ஊழியத்தின் பொறுப்பை முழுவதுமாக எடுத்துக் கொள்ளப் போகும் தன்னுடைய சீடன் எலிசாவுக்கு என்ன வேண்டும் என்று எலியா கேட்கிறான். எலிசா, எலியாவிடம் இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாகப் பரிசுத்த ஆவியின் வரம் வேண்டும் என்று கேட்கவில்லை. எலியாவின் ஆவியின் வரத்தில் இரட்டிப்பான பங்கு வேண்டும் என்று கேட்கிறான். இதற்கு என்ன அர்த்தம்? எலியாவின் தைரியம், விசுவாசம், உண்மை, பரிசுத்தம், வைராக்கியம், தாழ்மை, கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் போன்ற குணங்களில் இரட்டிப்பான பங்கை எலிசா கேட்டான்.  கர்த்தர் உனக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்பதில் உன் கவனத்தைச் செலுத்தாமல், நீ எப்படிப்பட்டவனா(ளா)க மாறுவதற்குக் கர்த்தர் உதவி செய்யவேண்டும் என்பதில் கவனம் செலுத்து. அப்பொழுது நீ மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பாய்.                       

ஜெபம்

ஆண்டவரே, எனக்கும் எலிசாவுக்குக் கொடுத்ததைப் போல விசுவாசம், உண்மை, வைராக்கியம், பரிசுத்தம், தாழ்மை, கீழ்ப்படிதல் ஆகியவற்றில் இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தாரும்.  ஆமென்.