காலைத் தியானம் – மே 17, 2020

2 இராஜா 2: 19- 22

உப்பை அதிலே போட்டு      

எரிகோ பட்டணம் யோசுவாவின் சாபத்தைப் பெற்றிருந்தது (யோசுவா 6:26). ஆகையால் அப்பட்டணத்தில் கெட்ட தண்ணீரும் வளமற்ற நிலமும் இருந்ததில் ஆச்சரியமில்லை.  எரிகோவின் மக்களும் அங்கிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரரும் எலிசாவை தேவனுடைய மனிதன் என்று மரியாதையுடன் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் தண்ணீரையும் நிலத்தையும் நன்மை தருவதாக மாற்றும்படி எலிசாவின் உதவியை நாடினார்கள். உப்பு மந்திர சக்தி வாய்ந்ததல்ல. உப்பு உடன்படிக்கையின் அடையாளம். அது சுத்திகரிப்பின் அடையாளம் (லேவியராகமம் 2: 13). தண்ணீரை ஆரோக்கியமாக்கினது உப்பல்ல. கர்த்தரே தண்ணீரை ஆரோக்கியமாக்கினார்.  This is what the LORD says: I have healed this water. தண்ணீரை மாத்திரமல்ல, உன்னையும் ஆரோக்கியமாக்குகிறவர் உன் கர்த்தர் ஒருவரே. பாவத்தின் சாபத்தை முறிக்கிற வல்லமையும் அவரிடம் மாத்திரம் உண்டு.                                       

ஜெபம்

ஆண்டவரே, சாபத்தின் பிடியிலிருந்து என்னையும் எனக்கு அருமையானவர்களையும் விடுவியும். உடலிலும் உள்ளத்திலும் முழுமையான ஆரோக்கியத்தைத் தாரும். ஆமென்.