2 இராஜா 2: 23- 25
மொட்டைத்தலையா, ஏறிப்போ
இது ஏதோ சிறு பிள்ளைகளின் விளையாட்டுத்தனம் அல்ல. “ஏறிப்போ” என்பது எலியா பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைக் குறித்து சொல்லப்பட்ட சொல். எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனதை எலிசாவைத் தவிர ஐம்பதுபேர் அறிந்திருந்தார்கள். ஆகவே அந்த செய்தி எல்லா இடமும் காட்டுத் தீயைப் போல பரவியிருந்தது. பெத்தேலிலும் பரவியிருந்தது. யெரொபெயாம் ராஜாவின் நாட்களிலிருந்து பெத்தேல் விக்கிரக வழிபாட்டுக்குத் தலைநகரமாக மாறிவிட்டது. கர்த்தரைக் குறித்த விசுவாசமும் பயமும் அங்கு இல்லை. எலிசாவைப் பார்த்தவுடன் பெத்தேலிலுள்ள இளைஞர்கள், நீயும் பரலோகத்துக்கு ஏறிப்போக வேண்டியதுதானே என்று சொல்லி கர்த்தரையும் அவருடைய தீர்க்கதரிசியான எலிசாவையும் கிண்டல் செய்தார்கள். உடனேயே கர்த்தரிடத்திலிருந்து அதற்கான தண்டனையைப் பெற்றார்கள். காட்டிலிருந்து வந்த கரடிகள் அந்த இளைஞர்களை அவர்களுடைய வாழ்நாளெல்லாம் மறக்கமுடியாதபடி பீறிபோட்டன. கர்த்தரையும் அவருடைய ஊழியக்காரரையும் ஒருபோதும் இழிவாகப் பேசாதே.
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய கோபத்துக்கு ஆளாகாதபடி என் இருதயத்தையும், என் வார்த்தைகளையும் காத்துக் கொள்ள உதவி செய்யும். ஆமென்.