2 இராஜா 3: 1- 12
இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்
ஆகாபின் குமாரனாகிய யோராம், தன் சகோதரனான அகசியாவின் 2 வருட அரசாட்சிக்குப் பின் இஸ்ரவேலின் (10 கோத்திரங்களுக்கு) ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் குமாரன் பெயரும் யோராம் தான். இந்த யோராம் தான் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமின் சகோதரியாகிய அத்தாலியாளைத் திருமணம் செய்திருந்தான். இப்போது மோவாபின் ராஜாவாகிய மேசாவுக்கு விரோதமாக யுத்தம் செய்வதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், ஏதோமின் ராஜாவும் போகிறார்கள். மோவாபின் வடக்கு எல்லையில் போர்வீரர்களின் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்பதால் தெற்கு வழியாகப் படையெடுக்க முடிவு செய்து, ஏழு நாள் பயணத்தையும் முடித்துவிட்டார்கள். இப்போது இராணுவத்துக்கும் மிருக ஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லை. இந்த நேரத்தில்தான் தாவீதின் வம்சத்தில் வந்த யோசபாத்துக்கு கர்த்தரிடம் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. நாமும் பிரச்சனை வந்தவுடன்தான் கர்த்தரைத் தேடுகிறோமோ? எந்த ஒரு காரியத்தையும், முதலிலேயே, அதை ஆரம்பிக்குமுன் கர்த்தருடைய அனுமதி இல்லாமல் ஆரம்பிக்கக்கூடாது. ஒருவேளை அதில் தவறிவிட்டாலும், பிரச்சனை வரும்போதாவது அந்த மூன்று ராஜாக்களைப் போல கர்த்தரை நோக்கி ஓடு. Better late than never.
ஜெபம்
ஆண்டவரே, சில சமயங்களில் உம்முடைய அனுமதி இல்லாமல் முடிவு எடுத்துவிடுகிறேன். என்னை மன்னியும். உம்முடைய பிரசன்னம் எப்போதும் என்னோடிருப்பதாக. ஆமென்.