காலைத் தியானம் – மே 20, 2020

2 இராஜா 3: 13- 27

யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால்        

இதுவரை நாம் ராஜா ஒரு இடத்தில் இருந்துகொண்டு கர்த்தருடைய தீர்க்கதரிசிக்கு ஆள் அனுப்பி கூப்பிடுவதைத்தான் பார்த்திருக்கிறோம். இப்போது இருந்த இக்கட்டான நிலையில், மூன்று ராஜாக்களும் எலிசா தீர்க்கதரிசியைப் பார்க்க போனார்கள் என்பதை வேதத்தில் பார்க்கிறோம். ராஜாக்கள் தங்களைத் தாமே தாழ்த்தவேண்டிய நிலையில் இருந்தார்கள். அது மாத்திரமல்ல, கர்த்தருடைய கிருபை யோசபாத்துடன் இருந்தது. தாவீதின் வம்சத்தில் வந்த அவன் கர்த்தரைத் தவிர வேறே யாரையும் தொழுதுகொள்ளவில்லை. கர்த்தரும், தான் தாவீதுடன் செய்த உடன்படிக்கையை மறக்கவில்லை. யோசபாத் ஒருவனின் மூலமாக ஏதோம் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று. மேலும் மூன்று ராஜாக்களுக்கும் யுத்தத்தில் வெற்றி கிடைத்தது. உன் மூலமாக நீ வேலை செய்யும் இடமும், நீ வசிக்கும் ஊரும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெறுகின்றனவா?

ஜெபம்

ஆண்டவரே, என் வாழ்க்கை என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி என்னை உபயோகியும். ஆமென்.