2 இராஜா 4: 11- 17
எலிசா தன்னோடே சொன்னபடி . . . ஒரு குமாரனைப் பெற்றாள்
எலிசா, தன்னையும் தன் உதவியாளனாகிய கேயாசியையும் அன்போடே உபசரித்துவந்த சூனேமியாளுக்கு எதாவது நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தான். ராஜா அல்லது சேனாபதி போன்றவர்களிடம் ஏதாவது சிபாரிசு செய்யவேண்டுமானால் அதைச் செய்யலாம் என்று அவன் நினைத்தான். அந்தப் பெண்ணோ தனக்கு இருந்தவைகளை வைத்து மிகுந்த மன நிறைவோடு வாழ்ந்த படியால் தனக்கு எதுவும் தேவையிலை என்று சொல்லிவிட்டாள். கேயாசி, எந்த ராஜாவும் கொடுக்க முடியாத, கர்த்தாதி கர்த்தர் மாத்திரமே கொடுக்கக்கூடிய வெகுமதி ஒன்றைப் பரிந்துரைக்கிறான். அந்தப் பெண்ணுக்கு அவள் சமீப காலத்தில் நினைத்துக்கூடப் பார்க்காத, கேட்காத, பெரிய வெகுமதி கிடைத்தது. நீயும் மற்றவர்களின், குறிப்பாக ஊழியக்காரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய். கர்த்தர் நீ கேட்காமலேயே உன்னை ஆசீர்வதிப்பார்.
ஜெபம்
ஆண்டவரே, அந்த சூனேமியாளுக்கு இருந்ததைப் போல பிரதிபலன் பாராது பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனதை எனக்கும் தாரும். ஆமென்.