2 இராஜா 4: 29 – 37
ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்
எலியா ஏன் கேயாசியைத் தனக்கு முன்னதாகப் போகும்படி அனுப்புகிறான்? கேயாசி தன்னைவிட வயதில் குறைந்தவனாக இருந்திருக்க வேண்டும். மேலும் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியதிருந்ததால், எலிசா ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை. ஆனால் கேயாசி எலிசாவின் தடியை அந்த சிறுவனின் மீது வைத்தும் அவனுடைய உயிர் திரும்ப வரவில்லை. ஒருவேளை கேயாசியின் உள்ளத்தில் உள்ள கறைகள் கர்த்தருடைய ஆசீர்வாதத்திற்குத் தடையாக இருந்தனவா என்பது நமக்குத் தெரியவில்லை. கர்த்தர் எலிசாவின் மூலமாக மறுபடியும் ஒரு பெரிய அற்புதத்தைச் செய்கிறார். கர்த்தர் இன்றும் பெரிய அதிசயங்களைச் செய்ய வல்லவராகவும் விருப்பமுள்ளவராகவும் இருக்கிறார். உன் பாவ வாழ்க்கை அவருடைய அற்புதங்களுக்குத் தடையாக இல்லாதபடி பார்த்துக் கொள்.
ஜெபம்
ஆண்டவரே, எனக்கும் என் குடும்பத்துக்கும் நீர் செய்ய விரும்பும் அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் நான் தடையாக இருந்துவிடாதபடி என்னைப் பரிசுத்தப்படுத்தியருளும். ஆமென்.