காலைத் தியானம் – மே 26, 2020

2 இராஜா 4: 38- 44 

தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று 

இன்று வாசித்த பகுதியில் தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று என்பதையும் அந்த பஞ்சத்தின் மத்தியிலும் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கர்த்தர் எப்படி உணவளித்து காப்பாற்றி வந்தார் என்பதையும் பார்க்கிறோம். நம்முடைய விசுவாசம் உறுதிப்படும்படி, இரண்டு அற்புதங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முதல் அற்புதத்தில் கூழில் கலந்துவிட்ட நஞ்சு எலிசாவின் மூலம் அகற்றப்படுகிறது. இன்று உலகெங்கும் கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா கிருமிகளைக் குறித்த பயம் இருக்கும் சமயத்தில், கர்த்தருடைய பிள்ளைகளை அந்த கொடிய நச்சுக் கிருமி மேற்கொள்ள முடியாது என்பதை விசுவாசிப்போமாக. இரண்டாவதாக, இருபது அப்பங்களை வைத்து கர்த்தர் எலிசாவின் மூலமாக நூறுபேருக்கு சாப்பிடக் கொடுக்கிறார். ஒரு மாதத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்கும் இந்நாட்களில், பலருக்கும் வேலையும் வருமானமும் இல்லாத சமயத்தில், கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை ஆகாரமில்லாமல் போகவிடமாட்டார் என்பதையும் விசுவாசிப்போமாக. நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை என்று தாவீது ராஜா சங்கீதம் 37:25ல் சொல்லுகிறார்.                        

ஜெபம்

ஆண்டவரே, என்னுடைய அனுதின தேவைகளை எப்போதும் சந்திக்கிறதற்காக நன்றி சுவாமி. ஆமென்.