காலைத் தியானம் – மே 27, 2020

2 இராஜா 5: 1 – 4    

என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் 

சீரியாவும் இஸ்ரவேலும் எதிரிகள். நாகமான் சீரிய ராஜாவின் படைத் தலைவன் என்றால் நாட்டின் இரண்டாம் குடிமகன் என்று சொல்லலாம். பெயர் சொல்லப்படாத சிறுபெண் நாகமான் இஸ்ரவேலிலுருந்து சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்த ஒருத்தி. அந்த சிறுபெண் தன்னை அடிமையாகக் கொண்டு வந்திருக்கும் நாகமானை வெறுக்கவில்லை. குஷ்டரோகம் கர்த்தர் அவனுக்குக் கொடுத்த தண்டனை என்று நினைத்து மகிழவில்லை. நாகமானின் நலனைக் கருதி தனக்குத் தெரிந்த உண்மையை தைரியமாகச் சொல்லுகிறாள். இன்று நமக்குத் தலைவர்களாக நம் நாட்டை ஆட்சி செய்கிற அரசியல்வாதிகளில் விரும்பத்தக்க குணம் உடையவர்கள் ஒரு சிலரே. நீ உன் நாட்டின் தலைவர்களை வெறுக்கிறாயா அல்லது அவர்கள் கர்த்தரிடமிருந்து இரட்சிப்பையும் நன்மைகளையும் பெற்று அனுபவிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறாயா?                            

ஜெபம்

ஆண்டவரே, எங்கள் நாட்டின் தலைவர்களுக்காக ஜெபிக்கும் மனதை எனக்குத் தாரும். ஆமென்.