காலைத் தியானம் – மே 28, 2020

2 இராஜா 5: 5 – 8   

கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? 

அடிமைப் பெண் நாகமானின் மனைவியிடம் சமாரியாவிலுள்ள தீர்க்கதரிசியிடம் போனால் நாகமான் சுகம் பெறுவான் என்று சொல்கிறாள். எதிரியின் நாட்டிற்கு செல்ல வேண்டுமானால் நாகமான் சீரிய ராஜாவின் அனுமதி இல்லாமல் போக முடியாது. நாகமான் சீரிய ராஜாவின் அனுமதி பெறுவதற்காக அவனிடம் சென்றது சரிதான். சீரிய ராஜவோ, ஏதோ இஸ்ரவேலின் ராஜா தான் நாகமானைக் குணப்படுத்துவார் என்பது போல கடிதம் எழுதி அனுப்பிவிட்டார். இஸ்ரவேலின் ராஜா இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று நினைத்து தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டான். அவனுக்கு எலிசாவைப் பற்றி நினைவு வரவில்லை. எலிசா நாகமானைத் தன்னிடம் அனுப்பும்படி ராஜாவிடம் கேட்கிறார். எலிசாவிடம் வந்தால் மாத்திரமே கிடைக்கக்கூடிய சுகத்துக்கு நாகமான் எங்கெங்கோ அலைந்துவிட்டான். இன்றும் உலகம் அப்படிதான் அலைகிறது.  இயேசு ஒருவரே பாவங்களை மன்னித்து ஒருவனை சுத்தப்படுத்த முடியும். உலக மக்களில் பலர், அதற்கு பல வழிகள் உண்டு என்று நினைத்து எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெபம்

ஆண்டவரே, என் எண்ணங்களும், வார்த்தைகளும், செயல்களும் ஆண்டவரே, வழி தெரியாமல் சுற்றித்திரியும் மக்களுக்கு வழி காட்டும்படி என்னையும் உபயோகியும். ஆமென்.